Beeta Campus (Affiliated University) கெக்கிராவை புதிய கிளை திறப்பு

Beeta Campus தனது கல்வி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10.12.2025 அன்று புதிய கிளைக்கான வாடகை ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டது. அனுராதபுரம் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்வு, கெக்கிராவை நகரில் அமைக்கப்படும் புதிய வளாகத்தின் தொடக்கத்திற்கான முக்கியமான கட்டமாக அமைந்தது.

கெக்கிராவை கிளை திறப்பை முன்னிட்டு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல நல்வாழ்த்துக்கள் தெரிவித்த பொதுமக்கள் புதிய வளாகத்தைப் பார்வையிட வருகை தந்து தங்களின் உறுதுணையை வெளிப்படுத்தினர். ஆரம்பநாளிலேயே சில மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை Beeta Campusல் தொடரும் நோக்கில் degree நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்தது வளாகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இந்த முக்கிய நிகழ்வில் Beeta Campus தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் வவுனியா கிளை அலுவலக பிரதிநிதிகள் பங்கேற்று புதிய கிளையின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றிய தங்களின் நம்பிக்கையை பகிர்ந்து கொண்டனர். மாணவர்களுக்கு தரமான கல்வி, மேம்பட்ட வழிகாட்டல் மற்றும் தொழில்முனைவு சார்ந்த பயிற்சிகளை வழங்கும் புதிய கிளை, கெக்கிராவை மற்றும் சுற்றுவட்டார மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

கெக்கிராவை கிளை உதவி மேலாளர் திரு. பசோதரன் விக்ரம் இந்த நிகழ்வை திட்டமிட்டு சிறப்பாக ஒருங்கிணைத்தார். அவரது முயற்சியால் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன், Beeta Campusன் விரிவாக்கப் பயணத்தில் மேலும் ஒரு வெற்றிகரமான படியாக அமைந்தது.

மகிழ்ச்சி மற்றும் உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் Beeta Campus இந்த நிகழ்வை கொண்டாடி, மாணவர் சமூகத்திற்கு தரமான கல்வி மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்கும் தனது பணியை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Loading

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *