இலங்கையின் முன்னணி தனியார் கல்வி நிறுவமாக திகழும் பீற்றா வளாகம், சர்வதேச கல்வித் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய முயற்சியாக ‘மெகா 27‘ என்ற பெயரில் 27 படிப்புகளுக்கு 100% கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது சர்வதேச கல்வி வரலாற்றில் முதன்முறையாக, ஒரு கல்வி நிறுவனம் 27 தனித்தனி படிப்புகளில் முழுமையான இலவச உதவித்தொகையை வழங்கும் திட்டமாகும். உளவியல், வணிக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்பு, கல்வி, கணினி, விஞ்ஞானம் உள்ளிட்ட பல துறைகளில் இந்த வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், பீட்டா காம்பஸ் வழங்கும் சர்வதேச பட்டப்படிப்புகளும் இந்த உதவித்தொகை திட்டத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக கல்வி துறையில் அனுபவம் கொண்ட பீற்றா வளாகம், வவுனியாவில் தனித்துவமான கற்றல் சூழலை உருவாக்கி மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்து வருகின்றது. இதனை தொடர்ந்து, கொழும்பிலும் புதிய கிளையை ஆரம்பிக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றது. இது நாட்டின் பிற பகுதிகளிலுள்ள மாணவர்களுக்கு இலகுவாக கல்வி சேவையை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுத்தும்.
இது தொடர்பாக, பீற்றா வளாக தலைவர் கூறுகையில்:
‘படிப்புக்காக மாணவர்கள் நிதிச்சுமையால் தடுக்கப்படக் கூடாது. அதற்காகவே ‘மெகா 27‘ என்ற முழுமையான இலவச உதவித்தொகை திட்டத்தை அறிவித்து இருக்கிறோம். இன்றே மாணவர்கள் பதிவு செய்து, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கிக் கொள்ளலாம்‘ என தெரிவித்தார்.
‘மெகா 27‘ கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான சேர்க்கை இப்போது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் விரைந்து பதிவு செய்து, பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடங்களை கருத்தில் கொண்டு, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
📍 Beeta Campus (Affiliated University)
📞 +94(0)76 8611279 / +94 (0)70 7222664
🌐 www.beetacampus.com
உங்கள் எதிர்காலம் இங்கிருந்து ஆரம்பமாகின்றது!
H. F. Nusha
Art/design
Siyana
I have marked